
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் பிளே அஃப் சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள 9 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் தோல்வியடையும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ்
சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விடும். மேலும் தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய போட்டியிலும் விளையாடமாட்டார் என்பது அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.