
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்