ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹதராபாத் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
Trending
பஞ்சாப் கிங்ஸ்
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற அந்த அணி, அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விழிம்பில் இருந்த அந்த அணி இறுதிநேரத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து கம்பேக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் கடைசிவரை போராடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
அணியின் பேட்டிங்க் வரிசையில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங் ஆகியோருடன் தற்போது ஷஷாங்க் சிங்கும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் சாம் கரண், சிக்கந்தர் ரஸா, ஜிதேஷ் சர்மா போன்ற நடத்திர வீரர்கள் தொடர்ந்து சோபிக்க தவறுவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சில் காகிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரன், சிக்கந்தர் ராசா, ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் அந்த நடப்பு ஐபிஎல் சீசனில் வலிமை மிக்க அணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரை எடுத்துக்கொண்டால் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் ஷமாத் ஆகியோருடன் தற்போது இளம் வீரர் நிதிஷ் ரெட்டியும் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அணியின் பந்துவீச்சு துறையை புவனேஷ்வர் குமார் வழிநடத்தி வருகிறார். அவருக்கு துணையாக நடராஜன், பாட் கம்மின்ஸ், ஷஃபாஸ் அஹ்மத், ஜெய்தேவ் உனாத்கட், மயங்க் மார்கண்டே போன்ற வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் நடராஜன் மற்றும் உனாத்கட் இருவரும் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றிவருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.
Win Big, Make Your Cricket Tales Now