
Pretoria Capitals vs Joburg Super Kings Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி, நான்கு தோல்வி, ஒரு முடிவில்லை என 09 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.