Advertisement

எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மாற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan February 01, 2024 • 13:50 PM
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸ
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸ (Image Source: Google)
Advertisement

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்
  • இடம் - சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானம், செஞ்சூரியன்
  • நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இம்மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் வேகத்தை பயன்படுத்தி அவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள். அதே சமயம் அந்த நிலைமைகளை சமாளித்து நங்கூரமாக நிற்கும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - 02
  • மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் - 02

உத்தேச லெவன்

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: பிலிப் சால்ட், வில் ஜேக்ஸ், கைல் வெர்ரைன், ரைலீ ரூஸோவ், காலின் இங்க்ராம், காலின் அக்கர்மேன், செனுரன் முத்துசாமி, ஈதன் போஷ், வெய்ன் பார்னெல் (கே), ஆதில் ரஷித், டேரின் டுபாவில்லன்

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்: ராஸ்ஸி வான்டெர் டுசென், ரியான் ரிக்கல்டன், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கீரன் பொல்லார்ட் (கே), டெவால்ட் ப்ரீவிஸ், டெலானோ போட்ஜிட்டர், ஜார்ஜ் லிண்டே, தாமஸ் கேபர், ககிசோ ரபாடா, நுவான் துஷாரா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: பில் சால்ட் (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன்
  • பேட்டர்ஸ்: கீரன் பொல்லார்ட், ரைலீ ரூஸோவ், ரஸ்ஸி வான்டெர் டுசென்
  • ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்(துணைக்கேப்டன்), வில் ஜாக்ஸ், செனுரன் முத்துசாமி, ஜார்ஜ் லிண்டே
  • பந்துவீச்சாளர்கள்: வெய்ன் பார்னெல்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement