
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இந்நிலையில், முந்தை தோல்விக்கு பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
- இடம் - சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானம், செஞ்சூரியன்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)