
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு வந்ததால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கு அடுத்ததாக இரு அணிகளுக்கிடையிலான ஒரு ஆட்டம் கொண்ட டி20 தொடர் லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 46 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஆஸி. வீரர் நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஃபிஞ்ச் 55 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தானில் டெஸ்ட், டி20 தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்றது.