'பட்லர் - கோலி மோதல் இயல்பான ஒன்றே'
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டியின் போது விராட் கோலி - ஜோஸ் பட்லரின் மோதலானது இயல்பான ஒன்று தான் என இங்கிலாந்து கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மார்ச் 20ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் ஆதிரடியான ஆட்டத்தால் 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Trending
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 14ஆவது ஓவரை எதிர்கொண்ட போது, 52 ரன்கள் எடுத்திருந்த ஜாஸ் பட்லர், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களத்தைவிட்டு வெளியேறியக்கொண்டிருந்த பட்லர் ஒருசில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
இதனைக் கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி உடனே பட்லர் அருகே சென்று கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்டத்தின் இடையே பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் ஈயான் மோர்கன், "அவர்களுக்கு இடையே என்ன நடந்தது என்பது சரியாக தெரியாது. மேலும் கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. அதுபோல் தான் கோலி - பட்லரின் வாக்குவாதமும் இயல்பான ஒன்றுதான்" என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now