Advertisement

ஹர்திக் மீண்டும் அணியில் இணைய வேண்டுமெனில் இதனை செய்தாக வேண்டும் - கவுதம் கம்பீர்!

ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.

Advertisement
'People have already written him off': Gambhir
'People have already written him off': Gambhir (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 20, 2021 • 03:45 PM

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. இதையடுத்து இந்த தோல்வியை நினைத்து பெரிதாக கவலைப்படாமல், அடுத்த டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 20, 2021 • 03:45 PM

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியில் விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

Trending

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே, சிறந்த ஆடும் லெவனை செட் செய்ய மற்றும் பென்ச் வலிமையை அதிகரிக்க இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படுகிறது.

அந்தவகையில், மிடில் ஆர்டரில் ஃபினிஷிங் ரோல் செய்யக்கூடிய, அதேவேளையில் பவுலிங்கும் வீசக்கூடிய  ஒரு ஆல்ரவுண்டருக்கான இடம் இந்திய அணியில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா செய்துவந்த அந்த ரோலை செய்ய ஒரு தரமான வீரர் தேவை என்ற வகையில், வெங்கடேஷ் ஐயருக்கு நியூசிலாந்து தொடரில் அந்த ரோல் வழங்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால் அண்மைக்காலமாக பந்துவீசமுடியாமல் தவித்துவருகிறார். டி20 உலக கோப்பையில் ஆல்ரவுண்டர் என்று எடுக்கப்பட்ட பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீசவில்லை. அதனால் இந்திய அணி சரியாக 5 பவுலிங் ஆப்சனுடன் ஆட நேரிட்டது. அது இந்திய அணியின் காம்பினேஷனையும் பாதித்தது.

அடுத்தடுத்த போட்டிகளில் பாண்டியா ஒரு சில ஓவர்களை வீசினாலும், அவர் பழையபடி பந்துவீசவில்லை. அவர் பந்துவீசி, ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணியில் ஆடினால் மட்டுமே அது அணிக்கு பலனளிக்கும். அவரை வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடவைப்பது இந்திய அணி காம்பினேஷனை பாதிக்கும்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், “ஹர்திக் பாண்டியா ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி முழு ஃபிட்னெஸை அடைந்து, பவுலிங்கும் வீசினால் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பார். ஹர்திக் பாண்டியாவிற்கு கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும். 

அவர் இளைஞர்; அவருக்கு கண்டிப்பாக மீண்டும் இடம் கிடைக்கும். இதற்கிடையே அவருக்கு பதிலாக ஒரு வீரரை ஆடவைத்தால், அந்த வீரருக்கு தொடர் வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி தொடர் வாய்ப்பளித்தால் தான் அந்த வீரரின் உண்மையான திறமையை வெளிக்கொண்டுவர முடியும். அதன்மூலம் சிறந்த ஆடும் லெவனை செட் செய்ய முடியும். 

Also Read: T20 World Cup 2021

தொடர்ச்சியாக வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. இந்தியாவில் எப்பேர்ப்பட்ட வீரருக்கும் மாற்று வீரர் கிடைப்பார். ஆனால் ஒரு வீரரை நம்பி ஒரு ரோல் கொடுத்தால் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement