
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினர்.
இந்நிலையில் ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சையில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்கும் முன்பிருந்தே மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் விளையாடதாக காரணத்தல் ஒருநாள் தரவரிசைப்பட்டியளில் 8ஆம் இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடப்பாண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இலங்கை அணி ஏறத்தாழ இழந்துள்ளது.