
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு தொடரில் இருந்து விலகியுள்ளது.
இதனால் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியின் வெற்றி தோல்வியின் முடிவிலேயே குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நடப்பு சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தனிப்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் அவர் விலகியதற்கான காரணம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.