Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 16, 2024 • 14:16 PM
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன் (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த குவாலிஃபையர்ர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இரண்டாவது எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

அதன்படி இன்று நடைபெறும், இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து, இமாத் வசிம் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 9.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • இஸ்லாமாபாத் யுனைடெட் - 11
  • பெஷாவர் ஸால்மி - 12

உத்தேச லெவன்

பெஷாவர் ஸால்மி: சைம் அயூப், பாபர் ஆசாம் (கே), முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான், டாம் கோஹ்லர்-காட்மோர், பால் வால்டர், ரோவ்மேன் பாவ்ல், அமீர் ஜமால், லூக் வூட், மெஹ்ரான் மும்தாஜ், சல்மான் இர்ஷாத்.

இஸ்லாமாபாத் யுனைடெட்: அலெக்ஸ் ஹேல்ஸ், மார்ட்டின் கப்தில், ஆகா சல்மான், ஷதாப் கான் (கே), ஆசாம் கான், இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹைதர் அலி, ஹுனைன் ஷா, நசீம் ஷா, ஓபேத் மெக்காய்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஆசாம் கான்
  • பேட்ஸ்மேன்கள் - மார்ட்டின் கப்தில், பாபர் ஆசாம் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர்கள் - ஆகா சல்மான், ஷதாப் கான் (துணை கேப்டன்), சைம் அயூப், அமீர் ஜமால்
  • பந்துவீச்சாளர்கள் - லூக் வூட், சல்மான் இர்ஷாத், நசீம் ஷா, ஹுசைன் ஷா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement