பிஎஸ்எல் 2024 குவாலிஃபையர் 1: பெஷாவர் அணியை 147 ரன்களில் சுருட்டியது முல்தான்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 22 ரன்களில் முகமது ஹாரிஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹசீபுல்லா கானும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் கொஹ்லர் கட்மோர் 24 ரன்களுக்கும், ரோவ்மன் பாவெல் 12 ரன்களுக்கும், அமர் ஜமால் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய பால் வால்டர், லூக் வுட் ஆகியோர் தலா 14 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன், உசாமா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றிக்காக போராடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now