Advertisement
Advertisement
Advertisement

கரோனா அச்சுறுத்தல்: வங்கதேசத்திலிருந்து கிளம்பும் பிலாண்டர்!

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வரும் வெர்னோன் பிலாண்டர், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச தொடரிலிருந்து விலகி தாயகம் திரும்பவுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 29, 2021 • 10:47 AM
Philander To Leave Bangladesh Camp And Fly Home Due To Rising Covid Concerns
Philander To Leave Bangladesh Camp And Fly Home Due To Rising Covid Concerns (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெர்னோன் பிலாண்டர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பிலாண்டர், தற்போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வருகிறது. 

அதன்படி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் பாகிஸ்தான் அணியுடன் பிலாண்டரும் செயல்பட்டு வருகிறார். 

Trending


இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் உறுமாறிய கரோனா வைரஸ் (ஒமைக்ரான்) அச்சம் காரணமாக, பிலாண்டர் தாயகம் திரும்ப முடிவுசெய்துள்ளார். 

அதன்படி இன்றைய தினம் விமானம் மூலம் வங்கதேசத்திலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு பிலாண்டர் செல்கிறார். முன்னதாக வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்க - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement