
Philippe 99* pips Maxwell hundred as Sydney Sixers go top of table (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணியில் ஸ்டோய்னிஸ், கிளார்க், லார்கின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் சதம் விளாசி அசத்தினார்.