
அயர்லாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெல்ஃபெஸ்ட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக தொடங்கினார். 12 பந்தில் 24 ரன்கள் அடித்த அவரை நீடிக்க விடாமல் மார்க் அடைர் வீழ்த்தினார். ஃபின் ஆலன் (1), க்ளீவர் (5) ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் ஜோஷுவா லிட்டில்.
அதன்பின்னர் கிளென் பிலிப்ஸும் ஜிம்மி நீஷமும் ஜோடி சேர்ந்த அதிரடியை வெளிப்படுத்தினார். இதில் 16 பந்தில் 29 ரன்கள் அடித்து நீஷம் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் நிலைத்து நின்று அடித்து ஆடிய கிளென் பிலிப்ஸ் அரைசதம் அடித்தார். 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 69 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று முடித்து கொடுத்தார்.