
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி விண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 41 பந்தில் 76 ரன்னும், டேரில் மிட்செல் 20 பந்தில் 48 ரன்னும் குவித்தனர். டேவன் கான்வே 34 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட் கைப்பற்றினார்.