
Photos: Rohit Sharma's 'Priceless Lessons' To India U19 At NCA (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் காயம் காரணமாக ரோஹித் சர்மாவும், ஜடேஜாவும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. இருவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் தங்களுடைய காயங்களுக்குச் சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அண்டர் 19 வீரர்களுக்குப் கேப்டன் ரோஹித் சர்மா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.