
Pink Ball Test Between India & Sri Lanka To Be Hosted At Bangalore, Confirms Sourav Ganguly (Image Source: Google)
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25ஆம் தேதியும், 20 ஓவர் தொடர் மார்ச் 16ஆம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
டெஸ்ட் போட்டிகள் பெங்களூர், மொகாலியிலும், 20 ஓவர் போட்டிகள் மொகாலி, தர்மசாலா, லக்னோவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கரோனா பாதுகாப்பு காரணமாக முதலில் 20 ஓவர் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தர்மசாலா மற்றும் மொகாலியில் மட்டும் 20 ஓவர் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லக்னோவில் போட்டி நடத்தப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.