
'Playing In Powerplay Suits My Style', Reckons GT Opener Wriddhiman Saha (Image Source: Google)
கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்தோடு ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐ.பி.எல்.லில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 10 இடங்களை பிடித்து வெளியேறின.
பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தல் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.