மும்பை இந்தியன்ஸும் கிரேன் பொல்லார்ட்டும்!
ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் இடம்பெறாவிட்டாலும் 2023 ஐபிஎல் போட்டிக்கான மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரபல வீரர் கிரோன் பொலார்ட் இன்று அறிவித்துள்ளார். கடந்த 2010 முதல் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொலார்ட். 13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய பொலார்ட், 5 முறை ஐபிஎல் கோப்பையை மும்பை வெல்ல உதவியாக இருந்துள்ளார்.
பிஎல் போட்டியில் மும்பை அணிக்காக 189 ஆட்டங்களில் பொலார்ட் விளையாடியுள்ளார். 16 அரை சதங்களுடன் 3412 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 147.32. 223 சிக்ஸர்கள். பந்துவீச்சில் 69 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.79.
Trending
மும்பை இந்தியன்ஸும் கிரேன் பொல்லார்ட்டும்
- மும்பை அணி 2013இல் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. முக்கியக் காரணம், பொலார்ட் தான். இறுதிச்சுற்றில் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து மும்பைக்கு வெற்றியை அளித்து, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஐபிஎல் தொடரில் இதுவரை கிரேன் போல்லார்ட் 14 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சாம்பியன்ஸ் லீக், ஐபிஎல் போட்டிகள் என மொத்தம் 13 வருடங்களாக பொலார்ட் விளையாடியுள்ளார். ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமைக்கும் பொல்லார்ட் சொந்தக்காரர்
மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது பொலார்ட் எடுத்த ரன்கள்
- ஐபிஎல் 2010 இறுதிச்சுற்று 27(10)
- ஐபிஎல் 2013 இறுதிச்சுற்று 60*(32)
- ஐபிஎல் 2015 இறுதிச்சுற்று 36(18)
- ஐபிஎல் 2019 இறுதிச்சுற்று 41*(25)
ஓர் டி20 அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள்
- 211 - மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பொலார்ட்
- 157 - ஆர்சிபி அணிக்காக டி வில்லியர்ஸ்
- 157 - கேகேஆர் அணிக்காக சுநீல் நரைன்
- 139 - மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்கா
ஐபிஎல் போட்டியில் ஒரே அணிக்காக விளையாடிய வீரர்கள் (குறைந்தது 100 ஆட்டங்கள்)
*பொலார்ட் - மும்பை இந்தியன்ஸ் (2010 முதல்)
*கோலி - ஆர்சிபி (2008 முதல்)
*நரைன் - கேகேஆர் (2011 முதல்)
*பும்ரா - மும்பை இந்தியன்ஸ் (2013 முதல்)
*மலிங்கா - மும்பை இந்தியன்ஸ் (இருமுறை)
- ஐபிஎல் போட்டியில் 3,000 ரன்களும் 50 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்கள் - பொலார்ட், ஷேன் வாட்சன்.
- 2022இல் பொலார்டை ரூ. 6 கோடிக்குத் தக்கவைத்தது மும்பை அணி. அந்த சீசனில் 11 ஆட்டங்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 107.46 தான். எந்த ஐபிஎல் போட்டியிலும் இவ்வளவு குறைவாக அவருடைய ஸ்டிரைக் ரேட் இருந்தது கிடையாது.
- தற்போது பொல்லார்ட் ஓய்வை அறிவித்துள்ளதால், 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக மலிங்கா, பொலார்ட் இன்றி ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
Win Big, Make Your Cricket Tales Now