
ஜெய்பூரில் வந்திறங்கிய இந்திய அணி வீரர் கே.எல்.ராகுலிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு ராகுல் அளித்த பதிலும் தற்போது வைரலாகி வருகிறது. டி20 போட்டியின் துணை கேப்டன் ஆன கே.எல்.ராகுலிடம் நிருபர் ஒருவர், “டி20 போட்டியில் பங்கேற்பதற்காக ஜெய்பூர் வந்துள்ளீர்கள். இங்கு நிலவும் காற்று மாசுபாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
இந்த மாதம் தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றதற்கு பின்னர் டெல்லி, ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்து உள்ளது. ஜெய்பூரில் கடந்த சனிக்கிழமை அன்று காற்றின் தரம் அதிகப்படியாக மாசு அடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இன்று வரையில் வானம் மாசடைந்த புகை மண்டலமாகவே காட்சி அளிக்கிறது.
இந்த சூழலில் தான் காற்று மாசுபாடு குறித்து துணை கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கே.எல்.ராகுல், “சொல்வதென்றால் நாங்கள் ஜெய்பூர் வந்து இறங்கியதில் இருந்து இன்னும் வெளியே செல்லவே இல்லை. நேராக மைதானத்துக்கே வந்துவிட்டோம் என்பதால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.