
Ponting Returns To The Commentary Box At Perth; Details His Health Scare (Image Source: Google)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் கிரிக்கெட் வர்ணனையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பாவன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் டெஸ்ட் போட்டி வர்ணனையின்போது பேசிக்கொண்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இன்று மீண்டும் வர்ணனைக்கு திரும்பி உள்ளார்.