Advertisement

WI vs IND, 1st T20I: தோல்விக்கு பின் வருத்தத்தைப் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்!

இந்தியாவுடனான முதலாவது டி20 போட்டியில் தோல்வியடைந்தது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Pooran anguished by big loss to India; says 'we were indisciplined'
Pooran anguished by big loss to India; says 'we were indisciplined' (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 30, 2022 • 11:56 AM

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையே நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியையும் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 30, 2022 • 11:56 AM

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Trending

பின்னர் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக திணறி தொடர்ந்து ஆட்டம் இழந்ததன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின்னர் போட்டி முடிந்து தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில், “இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதோடு எங்களது அணியின் வீரர்களும் இந்த தோல்வியை நினைத்து வருத்தம் அடைந்துள்ளனர். இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலேயே நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நினைத்தோம்.

ஆனால் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் இதிலிருந்து மீண்டு வர முயற்சிப்போம். இந்திய அணி பேட்டிங் செய்யும்போது முதல் 18 ஓவர்களில் 150 ரன்கள் வரை தான் குவித்து இருந்தனர். ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை அவர்கள் பக்கம் கொண்டு சென்றனர்.

பின்னர் பந்துவீச்சிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தினர்” என தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement