
Posted inIPL 2022CricketNews IPL 2022: Kevin Pietersen Picks His Team Of The Tournament (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.
இந்த சீசனின் சிறந்த லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவருகின்றனர். முன்னாள் வீரர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரேமாதிரியான லெவனைத்தான் தேர்வு செய்தனர். ஆனால் கெவின் பீட்டர்சன் மட்டும் சற்றே வித்தியாசமான லெவனை தேர்வு செய்துள்ளார்.
கெவின் பீட்டர்சன்னின் பிளெயிங் லெவனில் ஜோஸ் பட்லர் மற்றும் டி காக் ஆகிய இருவரையும் இந்த சீசனின் சிறந்த தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். டி காக்கை இதுவரை யாருமே தேர்வு செய்யவில்லை. 3ஆம் வரிசையில் கேஎல் ராகுல், 4ஆம் வரிசையில் பாண்டியா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் பீட்டர்சன். மேலும் கோப்பையை வென்ற பாண்டியாவையே கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.