2023-க்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். உலகக்கோப்பையை கருத்தில் இருந்து அதற்கு ஏற்றபடி டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.
இந்த வருடம் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் கடந்த ஆண்டு போதுமான அளவிற்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் இந்த வருடம் அதிகமான போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளன. மேலும், கரோனா தொற்றால் அடிக்கடி போட்டி அட்டவணையை மாற்றக்கூடிய நிலையும் ஏற்படுகிறது.
ஆகவே,ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுவதாக ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. .
Win Big, Make Your Cricket Tales Now