எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டாவது சீசன் எஸ்ஏ20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - பார்ல் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
- இடம் - போலண்ட் பார்க், பார்ல்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
போலண்ட் பார்க் மைதானம் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த மைதானத்தில் அதிகபடியான பவுன்ஸ் இருக்கும் காரணத்தால் பேட்டர்களுக்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சிறப்பாக பந்துவீசும் வேகப்பந்துவீச்சாளர்களும் இம்மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை சொலுத்தலாம்.
நேரலை
எஸ்ஏ20 லீக் தொடரை இந்திய ரசிகர்கல் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 02
- பார்ல் ராயல்ஸ் - 01
- சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - 01
உத்தேச லெவன்
பார்ல் ராயல்ஸ்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், விஹான் லுபே, டேவிட் மில்லர் (கே), மிட்செல் வான் ப்யூரன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஃபேபியன் ஆலன், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, ஓபேத் மெக்காய், தப்ரைஸ் ஷம்சி
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜோர்டான் ஹெர்மன், டேவிட் மாலன், டாம் ஆபெல், ஐடன் மார்க்ரம் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சன், லியாம் டாசன், பெயர்ஸ் ஸ்வான்போல், சைமன் ஹார்மர், டேனியல் வோரல்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
- பேட்டர்ஸ்: ஜேசன் ராய், டாம் ஆபெல்
- ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், அண்டில் பெஹ்லுக்வாயோ, விஹான் லுபே, ஃபின் ஆலன், மார்கோ ஜான்சென்
- பந்துவீச்சாளர்கள்: சைமன் ஹார்மர், லுங்கி இங்கிடி
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now