
Prabath Jayasuriya Test Fifer: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வீரர்கள் பட்டியலில் பிரபாத் ஜெயசூர்யா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்னில் ஆல்அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்து அசத்தினார். மேலும் தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோரும் அரைசதம் கடக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 458 ரன்களைக் குவித்தது.
பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுட 133 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் சத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக பதும் நிஷங்கா தேர்வு செய்யப்பட்டார்.