
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
எங்களின் கணிப்பு படி, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ரச்சின் ரவீந்திரா தற்போது இருக்கும் ஃபார்மில் அவர் தான் நிச்சயம் தொடக்க வீரராக களமிறங்குவார். ஒருவேளை அவர் லெவனில் இடம்பெறாத பட்சத்தில் டெவான் கான்வேவுக்கு அந்த வாய்ப்பானது கிடைக்கும்.