
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி 5 டி20, 3ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய அயர்லாந்து அணி, இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன் ஆகியோர் நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சு தரப்பில் சிமி சிங், கிரேக் யங், பேரி மெக்கர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது.