
Cricket Image for விஜய் ஹசாரே கோப்பை: பட்டத்தை வென்றது மும்பை! (Image Source: twitter)
இந்தியாவின் உள்ளூரு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை அணி, உத்தரப் பிரதேசம் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தரப் பிரதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் மாதவ் கௌசிக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படித்தி சதமடித்ததோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய சமர்த் சிங், அக்ஷ்தீப் சிங் ஆகியோரும் அரைசதம் அடித்து அணிக்கு வலிமை சேர்த்தனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை குவித்தது. இதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மாதவ் கௌசிங் 156 ரன்களை சேர்த்தார்.