
Prithvi Shaw And Suryakumar Yadav’s Travel Plans To England May Get Affected After Krunal Pandya Tes (Image Source: Google)
இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்து, டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று நடப்பதாக இருந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியானது. அதன்விளைவாக, இன்று நடக்கவிருந்த 2ஆவது டி20 போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் குர்னால் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 8 வீரர்களில், இங்கிலாந்துக்கு செல்லவிருந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவும் அடக்கம்.