பிஎஸ்எல் 2021: டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி பந்துவீச்சு!
பிஎஸ்எல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 6ஆவது சீசன் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியது.
இதில் இன்று நடைபெறும் 15 வது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
லாகூர் கலந்தார்ஸ் (விளையாடும் லெவன்): ஃபக்கர் ஜமான், சோஹைல் அக்தர் (இ), முகமது பைசன், முகமது ஹபீஸ், பென் டங்க், டிம் டேவிட், ஜேம்ஸ் பால்க்னர், ரஷீத் கான், அகமது டேனியல், ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரஃப்
இஸ்லாமாபாத் யுனைடெட் (விளையாடும் லெவன்): உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, சதாப் கான் (கே), உசேன் தலாத், இப்திகர் அகமது, ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ரோஹைல் நசீர், ஹசன் அலி, ஃபவாத் அகமது, முகமது வாசிம் ஜூனியர்
Win Big, Make Your Cricket Tales Now