
PSL 2021: Multan Sultans set a target of 177 for Karachi Kings! (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த சோயிப் மசூத் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின்னர் முகமது ரிஸ்வான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ப்து சோயிப் மசூத்தும் 31 ரன்களில் வெளியேறினார். அதன்பின் லிலே ரஸ்ஸோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்களைச் சேர்த்தார்.