
PSL 2021: Rashid help Lahore consolidate top spot (Image Source: Google)
பிஎஸ்எல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, பெஸ்வர் ஸால்மி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி அணி பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஃபகர் ஸமாம், சொஹைல் அக்தர், ஃபைஸான், முகமது ஹபீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பி ஜோடி சேர்ந்த பென் டங்க் - டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில்க் டிம் டேவிட் அரைசதம் கடக்க, பென் டங்க் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.