
PSL 2022: Lahore Qalandars defeat Peshawar Zalmi by 29 runs (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஃபகர் ஸமானின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெஷ்வர் அணியில் காம்ரன் அக்மல், ஹைதர் அலி ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.