Advertisement

பிஎஸ்எல் 2022: ஹாரி ப்ரூக் அதிரடி சதம்; இஸ்லாமாபாத்திற்கு 198 ரன்கள் இலக்கு!

பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 19, 2022 • 22:00 PM
PSL 2022: Lahore Qalandars postes total on 197/6
PSL 2022: Lahore Qalandars postes total on 197/6 (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 27ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணியில் பிலிப் சால்ட், காம்ரன் குலம், முகமது ஹபீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Trending


அடுத்து ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஃபகர் ஸமான் 51 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஹாரி ப்ரூக் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 102 ரன்களைச் சேர்த்தார். இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகலைக் கைப்பற்றினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement