
PSL 2022: Multan Sultans beat Karchi Kings by 7 wickets (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணிக்கு சர்ஜீல் கான் - பாபர் ஆசம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் சர்ஜீ 43 ரன்னிலும், பாபர் 23 ரன்னிலும் விக்கெட்டை இழந்தன.
பின்னர் வந்த வீரர்கள் இம்ரான் தாஹிரின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. முல்தான் அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.