Advertisement

பிஎஸ்எல் 2022 குவாலிஃபையர்: கலந்தர்ஸுக்கு 164 இலக்கு!

பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
PSL 2022: Multan Sultans finishes off 163/2
PSL 2022: Multan Sultans finishes off 163/2 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 23, 2022 • 09:54 PM

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 23, 2022 • 09:54 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஷான் மசூத் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - அமிர் அஸ்மத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அமிர் அஸ்மத் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த ரிலே ரொஸ்ஸொவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது.

பின் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. இதில் ரிலே ரொஸ்ஸோவ் 65 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement