
PSL 2022: Multan Sultans finishes off 222/3 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற் 13ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பெஷ்வர் ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தன.
இதில் ஷான் மசூத் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ரிஸ்வான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட்டும் அதிரடியில் மிரட்டினார்.