
PSL 2022: Shaheen Afridi has been officially announced as Lahore Qalandars captain (Image Source: Google)
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் லாகூர் கலந்தர்ஸ் அணி நேற்றைய தினம் தங்களது வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.