
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று கராச்சியில் நடந்துவரும் போட்டியில் கராச்சி கிங்ஸும் முல்தான் சுல்தான்ஸும் விளைடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் மந்தமாக பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 12 பந்தில் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய தாஹிர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
அதன்பின் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தாஹிர் 46 பந்தில் 65 ரன்கள் அடித்தார். ஆனால் தொடக்க வீரர் மேத்யூவேட் படுமந்தமாக பேட்டிங் செய்து 47 பந்தில் 46 ரன்கள் மட்டுமே அடித்ததால், கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் மட்டுமே அடித்தது. முல்தான் சுல்தான்ஸ் தரப்பில் இஷான்ல்லா இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.