Advertisement

PSL 2023: சாம் பில்லிங்ஸ் அதிரடியில் 180 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!

முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 04, 2023 • 21:30 PM
PSL 2023: Lahore Qalandars post a total of 180/9!
PSL 2023: Lahore Qalandars post a total of 180/9! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்று வர்ம் 20ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தால் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் ரன் ஏதுமின்றியும், மிர்ஸா தாஹிர் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். 

Trending


பின்னர் ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் - சாம் பில்லிங்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபிக் 35 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சாம் பில்லிங்ஸ் அரைசதம் கடந்த கையோடு 35 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸாவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹுசைன் தாலத் 9 ரன்களிலும், ரஷித் கான் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வைஸ் 15 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை சேர்த்தது. முல்தான் அணி தரப்பில் அன்வர் அலி, இஷனுல்லா, அபாஸ் அஃப்ரிடி, கீரென் பொல்லார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement