
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு முகமது ஹாரிஸ் - கேப்டன் பாபர் ஆசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹாரிஸ் 21 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாய்ம் அயூப் 3, டாம் கொஹ்லர் காட்மோர் 1, ரோவ்மன் பாவெல், ஜேம்ஸ் நீஷம் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்து அசத்தினார்.