
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி , சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.
அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணியில் மிர்ஸா தாஹிர் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
பின் 22 ரன்களில் ஃபகர் ஸமான் ஆடமிழக்க, அவரைத்தொடர்ந்து மிர்ஸா தஹிர் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய காம்ரன் குலாம் 21 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் - ஹுசைன் தாலத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.