
பிஎஸ்எல் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபர்ஹான் - மிர்ஸா தாஹிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 12 ரன்களில் மிர்ஸா தாஹிரும் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் - ஷாஹீன் அஃப்ரிடி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அசத்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.