
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு டிம் செஃபெர்ட் - டேவிட் வர்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டேவிட் வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாத் பைக் 20 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அப்பாஸ் அஃப்ரிடி அதிரடியாக விளையாடி அப்பாஸ் அஃப்ரிடி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 24 ரன்களையும், குஷ்தில் ஷா 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் தரப்பில் நசீம் ஷா, ஜேசன் ஹோல்ட, ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.