
psl-6-multan-sultan-beat-peshawar-zalmi-by-8-wickets (Image Source: Google)
பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ், பெஸ்வர் ஸால்மி அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஸ்வர் ஸால்மி அணியில் ரூதர்ஃபோர்ட் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெஸ்வர் ஸால்மி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரூதர்ஃபோர்ட் 56 ரன்களைச் சேர்த்தார். முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் தானி 4 விக்கெடுகளை கைப்பற்றினார்.