பிஎஸ்எல் 2021: மகுடம் சூடிய முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் மொகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஸ்வர் ஸால்மி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெஸ்வர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Trending
அதன்படி, முதலில் பேட் செய்த முல்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. ஷோயப் மக்சூத் 35 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 60 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய விளையாடிய ரசோவ் 21 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசி 50 ரன்கள் எடுத்தார். பெஸ்வர் அணி சார்பில் சமீன் குல், முகமது இம்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷோயப் மாலிக் 48 ரன்னும், கம்ரான் அக்மல் 36 ரன்னும் ரன்னும் எடுத்தனர். முல்தான் அணி சார்பில் தாஹிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பெஸ்வர் ஸால்மி அணியை வீழ்த்தி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மேலும் இப்போட்டியில் சோயப் மக்சூத் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now