
PSL: David, Rossouw star as Multan Sultans defeat Islamabad United (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி டிம் டேவிட், ரிலே ரொஸ்ஸோ ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டிம் டேவிட் 71 ரன்னும், ரிலே ரொஸ்ஸோ 67 ரன்னும் சேர்த்தனர். அதன்பின் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இஸ்லாமாபாத் அணி களமிறங்கியது.